பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழிந்தது வரதமாநதி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பழநி : பழநி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதில் வரதமாநதி அணை நிரம்பி வழிந்தது.நேற்றைய காலை நிலவரப்படி பாலாறு - பொருந்தலாறு அணையில் 46.24 அடி (மொத்த உயரம் 65 அடி) நீர் இருப்பு உள்ளது. அணையில் மழைப்பொழிவு 2 மி.மீ., நீர் வரத்து வினாடிக்கு 480 கன அடியும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 22 கனஅடியும் உள்ளது. வரதமாநதி அணையின் முழு
 நிரம்பி வழிந்தது வரதமாநதி

பழநி : பழநி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.

இதில் வரதமாநதி அணை நிரம்பி வழிந்தது.நேற்றைய காலை நிலவரப்படி பாலாறு - பொருந்தலாறு அணையில் 46.24 அடி (மொத்த உயரம் 65 அடி) நீர் இருப்பு உள்ளது. அணையில் மழைப்பொழிவு 2 மி.மீ., நீர் வரத்து வினாடிக்கு 480 கன அடியும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 22 கனஅடியும் உள்ளது.

வரதமாநதி அணையின் முழு கொள்ளளவான 66.47 அடி நீர் நிரம்பி வழிந்தது. ஒரே நாளில் 4 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்கு மழைப்பொழிவு 30 மி.மீ., நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105கனஅடி. நீர்வரத்து 105 கனஅடி.குதிரையாறு அணையில் 48.74 அடி (80 அடி) தண்ணீர் உள்ளது. இங்கு மழைப்பொழிவு 21 மி.மீ., இங்கு வினாடிக்கு 15 கன அடி நீர்வரத்தும், 8 கனஅடி தண்ணீர் வெளியேற்றமும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X