நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்; வளசையில் தான் இந்த அவலம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் : வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற, மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கைக்கு, விமோசனம் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோடம்பாக்கம் -- போரூரை இணைக்கும் முக்கிய சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது. இதில், வடபழநி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் உள்ளிட்ட, 10 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இந்த பேருந்து நிறுத்தங்களில்

வளசரவாக்கம் : வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற, மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கைக்கு, விமோசனம் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோடம்பாக்கம் -- போரூரை இணைக்கும் முக்கிய சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது. இதில், வடபழநி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் உள்ளிட்ட, 10 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இந்த பேருந்து நிறுத்தங்களில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

இதில், வடபழநி, வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடை இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, வளசரவாக்கத்தில் முதியோர் மற்றும் குழந்தைகள் அமர இடம் இல்லாததால், மழையிலும், வெயிலிலும் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வளசரவாக்கம் பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக நிழற்குடை இல்லாததால், பெரும் சிரமப்படுகிறோம். இது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.எனவே நிழற்குடை அமைக்கவும், அதில் பேருந்துகளின் நேர அட்டவணை வைக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X