பொது செய்தி

தமிழ்நாடு

சுவரோவியங்களால் அழகாகும் சென்னை மாநகரம்

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிண்டி : சென்னை மாநகரை சுவரோவியங்களால் அழகு சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.சென்னை மாநகரம், பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் பெரிதும் விரும்பும் நகரமாக உள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்தும் விதமாக, பிரதான சாலை வழித்தடங்களில் உள்ள பகுதிகளை, அழகு சேர்க்க மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, பொது கழிப்பறை, அரசு இடங்களில் உள்ள தடுப்புச்
 சுவரோவியங்களால் அழகாகும் சென்னை மாநகரம்

கிண்டி : சென்னை மாநகரை சுவரோவியங்களால் அழகு சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

சென்னை மாநகரம், பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் பெரிதும் விரும்பும் நகரமாக உள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்தும் விதமாக, பிரதான சாலை வழித்தடங்களில் உள்ள பகுதிகளை, அழகு சேர்க்க மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, பொது கழிப்பறை, அரசு இடங்களில் உள்ள தடுப்புச் சுவர்களில் வண்ணம் பூசி, ஓவியம் வரைய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி, மண்டலம் வாரியாக நடக்கிறது.

சென்னைக்குள் நுழையும் முக்கிய பகுதியாக, சைதாப்பேட்டை, கிண்டி சர்தார்படேல் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி, அரசு துறைகளின் பிரமாண்ட சுவர்கள் உள்ளன.இந்த சுவர்களில் ஓவியம் வரைந்து, வண்ணமயமாக மாற்றப்படுகிறது. காடு, வன விலங்குகள், பறவைகளை என அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு, சுவர்களுக்கு அழகு சேர்க்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202107:26:32 IST Report Abuse
அப்புசாமி தெருவில் போடப்படும்.குப்பையை , சாக்கடையை கண்டுக்க மாட்டாங்கோ. ஓவியம் வரையும் காண்டிராக்டை உ.பி களுக்கு குடுத்து சந்தோஷப் படுத்துவாங்கோ. இதெல்லாம் பெங்களூரில் 10, 15 வருஷத்துக்கு முன்னாடியே பாத்தாச்சுங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X