பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு ஆண்டுகளாகியும் கிடைக்காத திருமண உதவி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் திருமண உதவித் தொகை வழங்காததால் மணம் முடித்த பெண்கள் 2 ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 10 ம் வகுப்பு முடித்த பெண்களுக்குரூ.25 ஆயிரம் மற்றும் அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்குகிறது. பிளஸ் 2முடித்த வர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம், ஒரு பவுன் தங்கம் வழங்குகிறது.குஜிலியம்பாறை ஒன்றியத்தில்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் திருமண உதவித் தொகை வழங்காததால் மணம் முடித்த பெண்கள் 2 ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 10 ம் வகுப்பு முடித்த பெண்களுக்குரூ.25 ஆயிரம் மற்றும் அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்குகிறது. பிளஸ் 2முடித்த வர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம், ஒரு பவுன் தங்கம் வழங்குகிறது.குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்டபெண்கள் திருமணம் முடித்து, திருமண உதவித்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு இதுவரை திருமண நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் உதவித்தொகை கிடைப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் கூறியதாவது: திருமண உதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை. மக்கள் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் காத்துள்ளனர். புதிய ஆட்சியிலாவது விரைந்து வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X