கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு ரேஷன் கார்டு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை:பழங்குடியினரின் கிராமங்களில் ஆய்வு செய்து, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு கார்டு வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டைச் சேர்ந்த மல்லிகா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7.21 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். அவர்கள், வனத்தில்

மதுரை:பழங்குடியினரின் கிராமங்களில் ஆய்வு செய்து, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு கார்டு வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டைச் சேர்ந்த மல்லிகா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7.21 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். அவர்கள், வனத்தில் சேகரிக்கும் தேன், கிழங்கு, மிளகு உட்பட பல பொருட்களை கொரோனா ஊரடங்கால் விற்க முடியவில்லை. இதனால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நிவாரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 4, 000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. இது, பழங்குடியினருக்கு சென்றடைய வில்லை. பலருக்கு ரேஷன் கார்டு இல்லாததே காரணம்.இது திண்டுக்கல், தேனி, தென்காசி, கோவை, கடலுார் உட்பட பல மாவட்டங்களில் 'ஏக்தா பரிஷத்' அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. பலருக்கு ஆதார், பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்கள் இல்லை. இதனால், அரசின் நல உதவிகளை பெற முடியவில்லை.

பழங்குடியினரின் கிராமங்களில் ஆய்வு செய்து, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வழங்கக் கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி, 'மனுதாரர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இயக்குனரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அவர் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X