பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவேறியது நீண்ட கால கோரிக்கை; தாம்பரம் பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தாம்பரம்: தாம்பரம், அதை சுற்றியுள்ள பல்வேறு நிலை உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், தாம்பரம்மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களின், நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,

தாம்பரம்: தாம்பரம், அதை சுற்றியுள்ள பல்வேறு நிலை உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், தாம்பரம்மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களின், நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள், சென்னை மாநகராட்சியை தவிர்த்து, பிற பகுதிகள், வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கல் உள்ளது.புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து, தாம்பரம், அம்பத்துார் மாநகராட்சிகளை உருவாக்க, சி.எம்.டி.ஏ., துணை தலைவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலர், வருவாய் நிர்வாகத்துறையின் சிறப்பு ஆணையர் தலைமையில், சிறப்புக் குழுவை, தமிழக அரசு, 2007ல் அமைத்தது.அக்குழு வாயிலாக, பொதுமக்கள் கருத்துகளை பெற்று, மூன்று வகையான மாதிரி திட்டங்களை, சி.எம்.டி.ஏ., உருவாக்கியது.

அதன்படி, 'மாநகராட்சியின் எல்லையை விரிவாக்குவது, தாம்பரம், ஆவடி அல்லது அம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு, மாநகராட்சி உருவாக்குவது' என, முடிவு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அம்பத்துார், அதனுடன் இணைக்கப்பட்டது; 2017ல் ஆவடி மற்றும் தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவிப்பதற்கான, நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில், 2019ல் ஆவடி மாநகராட்சியாக, தரம் உயர்த்தப்பட்டது.

எனினும், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தது. தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைந்து, 100 நாட்கள் கடந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது, 13 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம் உட்பட, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் எளிதில் கிடைக்கும்.இந்த வசதிகளுக்காக, ஒவ்வொரு முறை அரசிடம் கோரிக்கை வைக்கும்போதெல்லாம், அந்தந்த உள்ளாட்சிகளுக்கேற்ப, நிதி மட்டும் ஒதுக்கி வரப்பட்டதால், பல இடங்களில், மக்களின் தேவைகள், பூர்த்தியாகவில்லை. தற்போதைய, அறிவிப்பு மக்களுக்கு, பெரும் நிம்மதியை அளிக்கும்.டி.தாமோதரன், 50, காப்பாளர், முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு.

சிட்லபாக்கத்தில், போதிய குடிநீர் வசதியின்றி, இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு, இன்று வரை, தீர்வு காணப்படவில்லை. தற்போதைய, மாநகராட்சி அறிவிப்பால், சிட்லபாக்கம் பகுதி மக்கள், தங்களுக்கான பாதாள சாக்கடை திட்டம், தரமான குடிநீர் வசதி உட்பட, அனைத்து தேவைகளும், கிடைக்கும் என, நம்பிக்கை அடைந்துள்ளனர்.ஜெ.சுனில்ஜெயராம், 47, சிட்லபாக்கம், சமூக ஆர்வலர்.

மாநகராட்சி அறிவிப்பால், தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்குட்பட்டு, இதுவரை செயல்பட்டு வந்த, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அடிப்படை வசதிகள், முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளது.‛அம்ருத்' மற்றும் ‛ஸ்மார்ட் சிட்டி' போன்ற திட்டங்களின் கீழ், பூங்காக்கள் அமைக்கப்படுவதுடன், நகர் புதிய பரிணாமம் பெறும்.ஆர்.பிரபு, 30, குரோம்பேட்டை, சமூக ஆர்வலர்.

செம்பாக்கம் நகராட்சியில் உள்ள, அனைத்து நலச்சங்கங்கள் சார்பிலும், அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். தாம்பரம் மாநகராட்சியானதால், சாலை, தெருவிளக்கு உட்பட, அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியாகும். தாம்பரத்தை தலைமையிடமாக வைத்து, புதிய காவல் மாவட்டம் உருவாக்க வேண்டும்.அதில், பரங்கிமலை காவல் மாவட்டத்தில் செயல்படும் புறநகர் காவல் நிலையங்களை இணைக்க வேண்டும். அதேபோல், சேலையூர் காவல் நிலையத்தை பிரித்து, மாடம்பாக்கத்தில், புதிய காவல் நிலையம் உருவாக்க வேண்டும்.வெ.சீதாராமன், 66, சத்திய சாய் நகர், ராஜகீழ்ப்பாக்கம், செம்பாக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X