பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் தியாகராஜன் கருத்து 'ஜாக்டோ - ஜியோ' கண்டனம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை:''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பொதுமக்களிடம் பகைமை உணர்வை வளர்க்கும் வகையில், நிதி அமைச்சர் தியாகராஜன் முன்னுக்கு பின் முரணாக புள்ளி விபரங்களை பதிவிட்டுள்ளார்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறினார்.அவர் கூறியதாவது:நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், அரசு ஊழியர்களை மிகவும் துச்சமென மதித்ததுடன், மக்களிடம்

மதுரை:''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பொதுமக்களிடம் பகைமை உணர்வை வளர்க்கும் வகையில், நிதி அமைச்சர் தியாகராஜன் முன்னுக்கு பின் முரணாக புள்ளி விபரங்களை பதிவிட்டுள்ளார்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறினார்.
அவர் கூறியதாவது:நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், அரசு ஊழியர்களை மிகவும் துச்சமென மதித்ததுடன், மக்களிடம் அன்னியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். பட்ஜெட்டில், 'ஒரு ரூபாயில் 19 காசு சம்பளத்திற்காகவும், 8 காசு ஓய்வூதியத்திற்காகவும் செலவிடப்படுகிறது' என்ற புள்ளி விபரத்தை அளித்து விட்டு, பேட்டி யில், '65 காசு செலவிடப் படுகிறது' என தெரிவித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரிந்த அரசு ஊழியர்களை, ஒரு நாள் கூட சம்பளத்தை, ஓய்வூதியத்தை இழக்காதவர்கள் என வசைபாடியிருக்கிறார்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்ள, தங்கள் ஒரு நாள் சம்பளமான, 150 கோடி ரூபாயை இரண்டு முறை வழங்கியதை மறந்து விட்டார்.

முந்தைய ஆட்சியில், கொரோனாவை காட்டி அகவிலைப்படியை முடக்கி வைத்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அதை உடனடியாக வழங்க குரல் கொடுத்தார். தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் நிதியமைச்சர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன், மக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள் மீது பகைமையை வளர்ப்பது போல பேசி வருகிறார்.இது அரசுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் இடையே உள்ள நல்லுறவில் விரிசல் ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X