பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீசார் விருந்து

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கொருக்குப்பேட்டை : சாலையில் கிடந்த விலை உயர்ந்த மொபைல் போனை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு, போலீசார் வெகுமதி வழங்கி விருந்து அளித்தனர்.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கண்ணன், 40. இவர் கடந்த, 20ம் தேதி மாலை, வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது, வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழே, தன் விலை உயர்ந்த மொபைல் போனை தவறிவிட்டார்.அந்த வழியாக
 மொபைல் போன் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீசார் விருந்து

கொருக்குப்பேட்டை : சாலையில் கிடந்த விலை உயர்ந்த மொபைல் போனை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு, போலீசார் வெகுமதி வழங்கி விருந்து அளித்தனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கண்ணன், 40. இவர் கடந்த, 20ம் தேதி மாலை, வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது, வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழே, தன் விலை உயர்ந்த மொபைல் போனை தவறிவிட்டார்.அந்த வழியாக வந்த கமலா, 56, என்பவர், கீழே கண்டெடுத்த மொபைல் போனை, அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார், மொபைல் போனை உரிமையாளர் கண்ணனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், காவல் நிலையத்தில் மொபைல் போனை ஒப்படைத்த கமலாவை பாராட்டும் வகையில், வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் உத்தரவிட்டார். இதன்படி, வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரான்வின் டானி, கமலாவுக்கு வெகுமதி அளித்து, காவல் நிலையத்தில் மதிய விருந்து அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஆக-202110:32:20 IST Report Abuse
அசோக்ராஜ் கமலா மலையாளப் படங்கள் பார்ப்பதில்லையோ? விலையுயர்ந்த ஃபோன் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X