சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தொடர்பு தகராறு: விவசாயி கொலை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விரோதத்தில், விவசாயியை வெட்டிக் கொலை செய்தவர், அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார், 58. இவரது மனைவி, எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.செல்வகுமாரின்

தஞ்சாவூர்:கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விரோதத்தில், விவசாயியை வெட்டிக் கொலை செய்தவர், அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார், 58. இவரது மனைவி, எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

செல்வகுமாரின் தாய்மாமன் மகளான சுதா, 44, என்பவர், கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடன், செல்வகுமார் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதேபோல், செல்வகுமாரின் உறவினரான ராமலிங்கம், 38, என்பவரும், சுதாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.இந்நிலையில், ராமலிங்கத்தின் மனைவி சுபாஷினி, 32, இரண்டு மாதங்களுக்கு முன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ராமலிங்கத்திடம் பேசிய சுதா, 'உன் மனைவிக்கும், செல்வகுமாருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் என்னிடம் உள்ளன. 'உன் மனைவி உடலில் உள்ள மச்சங்கள் குறித்தெல்லாம், என்னிடம் செல்வகுமார் பல முறை கூறியுள்ளார். இதனால் தான், உன் மனைவி தற்கொலை செய்து கொண்டார்' என கூறி உள்ளார்.

ஆத்திரமடைந்த ராமலிங்கம், கறம்பக்காடு மயானம் அருகே, நேற்று முன்தினம் இரவு மறைந்திருந்து, பைக்கில் வந்த செல்வகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில், அவர் உயிரிழந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார், ராமலிங்கம், சுதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X