சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் அர்ச்சகர், தாயாரிடம் வனத்துறையினர் விசாரணை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கம்பம்:தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வனப்பகுதிக்குள் உள்ள புராதனமான சண்முகநாதர் கோயில் அர்ச்சகர், தாயாரிடம் கோயில் ஆவணங்கள் தொடர்பாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரித்தனர்.இக்கோயில் கும்பாபிேஷகம் கடந்தாண்டு நடந்தது. கோயில் பாதை தொடர்பாக கோயில் அறக்கட்டளைக்கும், வனத்துறைக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கோயிலில் 50 ஆண்டிற்கும் மேலாக அர்ச்சகர்

கம்பம்:தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வனப்பகுதிக்குள் உள்ள புராதனமான சண்முகநாதர் கோயில் அர்ச்சகர், தாயாரிடம் கோயில் ஆவணங்கள் தொடர்பாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரித்தனர்.

இக்கோயில் கும்பாபிேஷகம் கடந்தாண்டு நடந்தது. கோயில் பாதை தொடர்பாக கோயில் அறக்கட்டளைக்கும், வனத்துறைக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கோயிலில் 50 ஆண்டிற்கும் மேலாக அர்ச்சகர் கணபதியின் தாய் சரஸ்வதி 75, தங்கி பணி செய்கிறார். அர்ச்சகர், தாயாருக்கு கோயில் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கம்பம் கிழக்கு ரேஞ்சர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பினார்.

இருவரும் கம்பம் வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனர். 'மேகமலை புலிகள் காப்பகமாக மாறிவிட்டதால் இனி கோயிலில் யாரும் தங்க கூடாது.அதற்கு எழுதி கொடுங்கள்' என வனத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.இருவரும் மறுத்துள்ளனர்.

இதனிடையே ஹிந்து இயக்கங்களின் நிர்வாகிகள், அறக்கட்டளை செயலாளர் கே.ஆர்.ஜெயபாண்டியன் தலைமையில் பக்தர்கள் வனத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அர்ச்சகர், தாயாரை அழைத்து வந்தனர். ரேஞ்சர் சுரேஷ் கூறுகையில், 'புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால் வனப்பகுதிக்குள் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.கோயிலிற்கு செல்லவோ, வழிபடவோ தடை விதிக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X