காஷ்மீரை ஆக்கிரமிக்க வெளிப்படையாக தாலிபான்கள் உதவியை நாடும் பாக்.,!

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாலிபான்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது அதனை நிரூபிக்கும் ஓர் சம்பவம் நடந்துள்ளது.தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது. தாலிபானுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக ஏற்கனவே

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாலிபான்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது அதனை நிரூபிக்கும் ஓர் சம்பவம் நடந்துள்ளது.



latest tamil news




தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது. தாலிபானுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக ஏற்கனவே தாலிபான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி குற்றம்சாட்டியிருந்தார்.

காஷ்மீர் மாநிலத்தை முழுவதுமாக அடைய பாகிஸ்தான் பல ஆண்டுகாலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பயங்கரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக பயிற்சி கொடுத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காஷ்மீரை ஆக்கிரமிக்க இம்ரான் கான் அரசு தாலிபான் அமைப்பின் உதவியை நாடுவதாக இம்ரான் கான் கட்சியின் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் தேகிரீக் இன்சாஃப் கட்சியின் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளது தற்போது இந்திய அரசுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.


latest tamil news




இதுகுறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய நீலம், காஷ்மீரை முழுவதுமாக அடைய தாலிபான்கள் உதவுவதாக இம்ரான் கானுக்கு வாக்களித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் சொன்ன இந்த செய்தி கண்டிப்பாக இந்திய அரசை சென்று சேர வேண்டும் என்று அவர் கூறினார். அவரது அதிர்ச்சியை பொருட்படுத்தாத நீலம், தொடர்ந்து தாலிபான் பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே இரு வேறு விதமாக பாதிக்கப்பட்டபட்டவை என்பதால் காஷ்மீரை ஆக்கிரமிக்க தாலிபான் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தாலிபான் தலைமை காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டு வந்தது. இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் இதில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் ஓர் கட்சித் தலைவர் இவ்வாறு தொலைக்காட்சியில் வெளிப்படையாக பேட்டி அளித்ததை அடுத்து இம்ரான் கான் அரசு தாலிபான்கள் உடன் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் தாலிபான்களின் உதவியுடன் பாகிஸ்தான் அரசு அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது இதன்மூலமாகத் தெளிவாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
31-ஆக-202115:26:49 IST Report Abuse
sankar அப்படி அதற்கு எத்தனித்தால் - இரண்டுமே வரைபடத்தில் இருக்காது
Rate this:
Cancel
25-ஆக-202118:56:53 IST Report Abuse
RAJA 🇮🇳ராஜா ராணுவ வீரர்கள் இதை பயன்படுத்தி சுட்டு தள்ளுங்கள் யாராவது உள்ளே நுழைந்தால்.அப்படியே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மத்திய அரசு கைப்பற்ற வேண்டும்.பலுசிஸ்தானுக்கு இந்தியா🇮🇳 பக்க பலமாக இருந்து மீட்க வேண்டும் அல்லது உதவவேண்டும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஆக-202116:03:02 IST Report Abuse
Vena Suna முல்லை முள்ளால் தான் எடுக்கணும். இவனுங்க கொடுக்கற பிரச்சினை மாதிரியே நாம இவனுங்களுக்கு கொடுக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X