பழநி மலைக் கோயில் ரோப்கார் சாப்ட் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி மலைக் கோயில் 'ரோப்கார்' சாப்ட் ஆய்வு

Added : ஆக 25, 2021
Share
பழநி : பழநி மலைக் கோயிலுக்கு சென்று சென்று வர ரோப்கார், வின்ச், படிப்பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வின்ச், படிப்பாதையும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.சில நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைமீது செல்லவும், கீழே இறங்கி வரவும் பயன்பட்டு வந்தது.தற்போது இதில் பொருத்த புதிய
 பழநி மலைக் கோயில்  'ரோப்கார்' சாப்ட் ஆய்வு

பழநி : பழநி மலைக் கோயிலுக்கு சென்று சென்று வர ரோப்கார், வின்ச், படிப்பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் தற்போது வின்ச், படிப்பாதையும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.சில நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைமீது செல்லவும், கீழே இறங்கி வரவும் பயன்பட்டு வந்தது.தற்போது இதில் பொருத்த புதிய சதுர வடிவிலான பெட்டிகள் தயாராக உள்ளன. புதிய ரோப், சாப்ட்கள் பொருத்தப்பட உள்ளன.

நேற்று கோல்கட்டாவிலிருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புதிய 'சாப்ட்' வரவழைக்கப்பட்டது. இதனை நேற்று நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சாப்ட் சுத்தம் செய்யப்பட்டு புதிய வண்ணம் பூசப்பட்ட மெட்டீரியல் ரோப்கார் மூலம் மலைமீது கொண்டு செல்லப்பட்டது. இதனை மலைமேல் உள்ள இயந்திரத்தில் பொருத்த உள்ளனர். விரைவில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X