தமிழ்நாடு

கல்வராயன்மலையில் கொக்கி போட்டு மின்சாரம் பகிரங்க திருட்டு! மிரட்டப்படும் மின் ஊழியர்கள்: கலெக்டர் கண்டுகொள்வாரா?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் விவசாய நிலங்களில் மின் மோட்டார் இயக்குவதற்காக ஆபத்தான நிலையில், பகிரங்கமாக மின் திருட்டு நடைபெறுவதை கலெக்டர், மின் வாரிய அதிகாரிகள் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகளில் 145 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு, தேன் சேகரித்தல் மற்றும் கூலி
கல்வராயன்மலையில் கொக்கி போட்டு மின்சாரம் பகிரங்க திருட்டு! மிரட்டப்படும் மின் ஊழியர்கள்: கலெக்டர் கண்டுகொள்வாரா?

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் விவசாய நிலங்களில் மின் மோட்டார் இயக்குவதற்காக ஆபத்தான நிலையில், பகிரங்கமாக மின் திருட்டு நடைபெறுவதை கலெக்டர், மின் வாரிய அதிகாரிகள் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகளில் 145 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு, தேன் சேகரித்தல் மற்றும் கூலி தொழில்களை நம்பியுள்ளனர்.குறிப்பாக பெரும்பகுதி மக்கள் விவசாயத்தையே முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு மரவள்ளி, மக்காச்சோளம், தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன்மலை கிராமங்களுக்கு எடுத்தவாய்நத்தம் மற்றும் புதுப்பட்டு பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.மின் விநியோகத்தைக் கண்காணிக்க வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய பகுதிகளில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

கல்வராயன்மலையில் விவசாயம் மேற்கொள்ள கிணறு அமைத்தும், ஆறுகளில் நேரடியாக பம்பு செட் அமைத்தும் தங்கள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இப்பகுதியில் பட்டா நிலங்களில் அமைத்துள்ள கிணறுகளுக்கு மட்டுமே அரசு சார்பில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பகுதியான விவசாய நிலங்களுக்கு பட்டா இல்லை.இதனால் விவசாய நிலங்களில் அமைத்துள்ள கிணறுகளுக்கு மோட்டார் அமைக்க மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் உள்ளது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் பம்பு செட்டையே அமைத்திருந்தனர். டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.இதனை சமாளிக்க கல்வராயன்மலையில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை இயக்க முறைகேடாக பகிரங்கமாக மின் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சீவாத்துமூலை துவங்கி, சேராப்பட்டு, தேக்கம்பட்டு வரை பல இடங்களில் கம்பங்களிலிருந்து ஆபத்தான நிலையில், கொக்கி போட்டு முறைகேடாக மின் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தடுக்க முயலும் சில மின் ஊழியர்களை உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது போன்ற மின் திருட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படையாகவே நடக்கிறது.

இதனைக் கண்டு கொள்ள வேண்டிய உயரதிகாரிகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.கல்வராயன்மலையில் முறைகேடாக மின் திருட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X