பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாநில கூடுதல் தலைவர் சத்தியமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், மத்திய அரசு வழங்கிய 11

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாநில கூடுதல் தலைவர் சத்தியமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், மத்திய அரசு வழங்கிய 11 சதவீத அகவிலைப்படியை, தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தொகுதிப்பூதிய ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தர பணி வழங்க வேண்டும். 101 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவியை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில தலைவர் லட்சுமிபதி, பொதுச் செயலாளர் தாஸ், வட்டார தலைவர்கள் ரவி, சம்சுதீன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் அன்பழகன், குமார், அருள், கென்னடி, வட்டார செயலாளர்கள் சதீஷ், கபிரேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X