பொது செய்தி

தமிழ்நாடு

கர்ணாவூர் சுடுகாட்டில் அதிகாரிகள் குழு ஆய்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திண்டிவனம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம், கர்ணாவூர் சுடுகாட்டு இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திண்டிவனம், கர்ணாவூர் சுடுகாடு ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், ஓடைக்கு நடுவே மேடான பகுதியில் சுடுகாடு இருப்பதால், மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் ஓடும்போது, உடல்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.ஓடையின் மேல் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல்

திண்டிவனம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம், கர்ணாவூர் சுடுகாட்டு இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டிவனம், கர்ணாவூர் சுடுகாடு ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், ஓடைக்கு நடுவே மேடான பகுதியில் சுடுகாடு இருப்பதால், மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் ஓடும்போது, உடல்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.ஓடையின் மேல் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதுகுறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், நேற்று காலை மரக்காணம் பி.டி.ஓ., ஜெகதீசன், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் தலைமையில் குழுவினர் கர்ணாவூர் சுடுகாடு இடத்தை ஆய்வு செய்தனர்.நகராட்சி மற்றும் வருவாய்த் துறை சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் கண்டறிந்து சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் வேலி போடப்படும்.ஓடையில் சிறிய பாலம் கட்டுவது குறித்து பொதுப்பணித் துறையினருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X