பொது செய்தி

தமிழ்நாடு

பாதையில் வேண்டும் 'டேக் டைவர்சன்!'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அன்னுார்:புறவழிச்சாலை பாதையில் மாற்றம் செய்ய கோரி, நீலகிரி எம்.பி., ராஜாவிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், அ.மேட்டுப் பாளையம் ஊராட்சியில், பட்டறை கிராமத்தில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன. கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கிராமம் உள்ளது.தற்போது கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக,
 பாதையில் வேண்டும் 'டேக் டைவர்சன்!'

அன்னுார்:புறவழிச்சாலை பாதையில் மாற்றம் செய்ய கோரி, நீலகிரி எம்.பி., ராஜாவிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், அ.மேட்டுப் பாளையம் ஊராட்சியில், பட்டறை கிராமத்தில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன. கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கிராமம் உள்ளது.தற்போது கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை, 2,000 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்க சர்வே மற்றும் கல் நடும் பணி நடக்கிறது.பட்டறை கிராமத்தில், ஒரு கி.மீ., துாரத்துக்கு, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நெடுஞ்சாலையை ஒட்டி கடை, வீடு, அலுவலகம், சிறு நிறுவனங்கள் வைத்துள்ள, 60 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த குடும்பத்தினர் நேற்று அன்னுார் வழியாக சத்திக்கு சென்ற நீலகிரி எம்.பி., ராஜாவிடம் மனு கொடுத்தனர்.கிராம மக்கள் அவரிடம் கூறுகையில், 'இங்கு இடம் கையகப்படுத்தி சாலையை அகலப்படுத்தினால், பாதி ஊர் அழிந்து விடும். வீடுகள், கடைகள், வழிபாட்டு தலங்களை இழக்க வேண்டி வரும். இதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நாங்கள், இதனால் மீளமுடியாத துன்பத்துக்கு ஆளாகி உள்ளோம். ஊருக்கு மேற்கே ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. எனவே ஊருக்கு மேற்கே செல்லும்படி பாதையில் மாற்றம் செய்ய வேண்டும்' என்றனர்.மனுவை பெற்ற ராஜா, 'கையகப்படுத்தும் நிலத்துக்கு நல்ல இழப்பீடு தருகின்றனர். இது மத்திய அரசு திட்டம். என்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்க்கிறேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X