பொது செய்தி

தமிழ்நாடு

சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திண்டிவனம் : சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனைப்பிரிவு நில உரிமையாளர்கள், உரிமை கோருபவர்கள் பங்கேற்ற கருத்துக் கேட்பு மற்றும் நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சென்னை சிப்காட் டி.ஆர்.ஓ.,

திண்டிவனம் : சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.

சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனைப்பிரிவு நில உரிமையாளர்கள், உரிமை கோருபவர்கள் பங்கேற்ற கருத்துக் கேட்பு மற்றும் நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சென்னை சிப்காட் டி.ஆர்.ஓ., பூவராகவன், துணை கலெக்டர் செந்தில்நாதன், திண்டிவனம் சிப்காட் துணை கலெக்டர் ஏகாம்பரம், நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன், தாசில்தார்கள் அலெக்சாண்டர், செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் பெலாக்குப்பம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் வழங்கிய 234 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், நிலம் வழங்கியவர்களுக்கு அரசு, சதுர அடி 200 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்.இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற சிலர், தொகையை உயர்த்தி தர கோரிக்கை வைத்தனர். இறுதியில் அரசு நிர்ணயித்த தொகைக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் தரப்பில் கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X