பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டில் பூண்டு சந்தை வேளாண் அதிகாரி தகவல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுகளை சந்தைப்படுத்தும் நோக்கில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கமிஷனர் வள்ளலார் இப்பகுதியில் ஆய்வு செய்தார். பூண்டுகளை சந்தைப்படுத்த விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விலை கிடைக்காத சூழல் உள்ளது. இதையடுத்து விவசாயிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மலைப் பகுதியில் சந்தை மையம் ஏற்படுத்த

கொடைக்கானல் : கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுகளை சந்தைப்படுத்தும் நோக்கில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கமிஷனர் வள்ளலார் இப்பகுதியில் ஆய்வு செய்தார்.

பூண்டுகளை சந்தைப்படுத்த விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விலை கிடைக்காத சூழல் உள்ளது. இதையடுத்து விவசாயிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மலைப் பகுதியில் சந்தை மையம் ஏற்படுத்த மனுச் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க வேளாண் வணிகத்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வணிகத்துறை கமிஷனர் வள்ளலார் மேல்மலை பகுதியில் ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், ''விவசாயிகளுடன் ஆலோசனை செய்து பூண்டை மதிப்புக் கூட்டும் பொருளாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பவும் உதவி செய்யப்படும்.வத்தலக்குண்டில் மலைப் பூண்டு விற்பனைக்கு என தனிச் சந்தை அமைக்கப்படும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X