கேரளாவில் அதிகரித்த கொரோனா ஒரேநாளில் 24,296 பேர் பாதிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று மீண்டும் 24,296 ஆக அதிகரித்தது.மாநிலத்தில் ஜூலை 17, 18, 19ல் கொரோனா ஒரு நாள் பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்தது. அதன்பிறகு ஓணப்பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் கொரோனா பரிசோதனை குறைந்தது. பாதிப்பும் 10 ஆயிரம் வரை சரிந்தது. நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,34,706 மாதிரிகள்

மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று மீண்டும் 24,296 ஆக அதிகரித்தது.

மாநிலத்தில் ஜூலை 17, 18, 19ல் கொரோனா ஒரு நாள் பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்தது. அதன்பிறகு ஓணப்பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் கொரோனா பரிசோதனை குறைந்தது. பாதிப்பும் 10 ஆயிரம் வரை சரிந்தது. நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்தது.

நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,34,706 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 24,296 பேருக்கு கொரோனா உறுதியானது.நோய் பாதிப்பு சதவீதம் புதிய உச்சமாக 18.04 ஆக அதிகரித்தது. 19,349 பேர் குணமடைந்தனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 173 பேர் இறந்ததால் மொத்த பலி 19, 757 ஆக அதிகரித்தது. தற்போது 1,59,335 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், 4,67,051 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்ட வாரியாக

எர்ணாகுளம் 3149,

திருச்சூர் 3046,

கோழிகோடு 2875,

மலப்புரம் 2778,

பாலக்காடு 2212,

கொல்லம் 1762,

கோட்டயம் 1474,

திருவனந்தபுரம் 1435,

கண்ணூர் 1418,

ஆலப்புழா 1107,

பத்தனம்திட்டா 1031,

வயநாடு 879,

இடுக்கி 612,

காசர்கோட்டில் 518 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X