பொது செய்தி

தமிழ்நாடு

உடலில் கழிவு வெளியேறினா... கவலையில்லை...! கோவிலில் விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும், அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகத்தின் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை
 உடலில் கழிவு வெளியேறினா... கவலையில்லை...! கோவிலில் விழிப்புணர்வு முகாம்

மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும், அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகத்தின் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கை அடுத்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு வழிபாட்டு தலங்களை அடைக்கும்படி அரசு அறிவிறுத்தியுள்ளது.நேற்று, வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காரமடை அடுத்த தோலம்பாளையத்தில் உள்ள அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகத்தின் சார்பில், கோவிலில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும், தசமூலகடுத்ரயம் கஷாயம், கூஷ்மாண்ட ரஸாயனம் ஆகிய ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகத்தின் டாக்டர்.மேகலை தலைமை வகித்து, மருந்துகளை வழங்கி, தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பருவ காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.டாக்டர் மேகலை பேசியதாவது:இனிவருவது மழைக் காலம் என்பதால், இயற்கையாகவே வயிற்றுத் தீ குறைவாக காணப்படும். இக்காலங்களில் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், காய்ச்சல், சளி, இருமல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இவற்றை தவிர்க்கும் பொருட்டு எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மற்றும் மஞ்சள், சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படும்.இப்பருவ காலத்தில், ஜீரண சக்தி மந்தமாக இருப்பதால், இரவில் கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம், மிளகு, பூண்டு இவற்றைக் கொண்டு, கஞ்சி செய்து இரவில் உணவாக சாப்பிடலாம். இதனால் எளிதில் ஜீரணமாவதுடன், அடுத்த நாள் காலைக்கடன் எளிதில் வெளியேறும். உடம்பில் கழிவுகள் இல்லை என்றால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X