மில் தொழிலாளர்கள் மோதல்: 10 பேர் காயம்; விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மில் தொழிலாளர்கள் மோதல்: 10 பேர் காயம்; விசாரணை

Added : ஆக 25, 2021
Share
சூலுார்:சூலுார் அருகே மில்லில் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் காயமடைந்தனர்.சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் மில் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், மேற்கு

சூலுார்:சூலுார் அருகே மில்லில் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் காயமடைந்தனர்.சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் மில் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.தொழிலாளர்களின் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த சூலுார் போலீசார் பிரச்னைக்கு காரணமான இரு தொழிலாளர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X