பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியாகும் கருமத்தம்பட்டி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, கருமத்தம்பட்டி பேரூராட்சி மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.கருமத்தம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி, 27 ச.கி.மீ., பரப்பளவு உள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை, 35 ஆயிரத்து, 62 பேர். 10 ஆயிரத்து, 245 குடியிருப்புகள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில், கருமத்தம்பட்டி பேரூராட்சி,

கருமத்தம்பட்டி:நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, கருமத்தம்பட்டி பேரூராட்சி மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.கருமத்தம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி, 27 ச.கி.மீ., பரப்பளவு உள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை, 35 ஆயிரத்து, 62 பேர். 10 ஆயிரத்து, 245 குடியிருப்புகள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில், கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டது.ஊராட்சிகள் இணைக்கப்படுமா?:கருமத்தம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு நேற்று வெளியானது. பேரூராட்சி பகுதி மட்டும் நகராட்சியாகுமா அல்லது அருகில் உள்ள கணியூர், கிட்டாம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கரவளி மாதப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இணைக்கப்படுமா என, தற்போது தெரியவில்லை. ஆனால், மேற்கண்ட நான்கு ஊராட்சிகளின் ஆண்டு வருமானம் மற்றும் மக்கள் தொகை குறித்து, நகராட்சித் துறை அதிகாரிகள் தகவல் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், ரோடு, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கும் என, கருமத்தம்பட்டி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X