கடலூர் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு! நகர மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பட வாய்ப்பு

Added : ஆக 25, 2021 | |
Advertisement
கடலுார் மற்றும் கடலுார் டவுன் 1866ம் ஆண்டில் ஒரு வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய நகராட்சியாக அமைக்கப்பட்டது. இது கடந்த 09.03.1993ம் தேதி முதல் சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, பின்னர் 02.12.2008 முதல் மீண்டும் சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்த நகரத்தின் பரப்பளவு 27.69 சதுர கி.மீ. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 158481 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1 லட்சத்து 73
கடலூர் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு! நகர மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பட வாய்ப்பு

கடலுார் மற்றும் கடலுார் டவுன் 1866ம் ஆண்டில் ஒரு வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய நகராட்சியாக அமைக்கப்பட்டது. இது கடந்த 09.03.1993ம் தேதி முதல் சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, பின்னர் 02.12.2008 முதல் மீண்டும் சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நகரத்தின் பரப்பளவு 27.69 சதுர கி.மீ. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 158481 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1 லட்சத்து 73 ஆயிரத்து 33 ஆகும். நகராட்சி கடலுார் முதுநகர், புதுநகர் என 45 வார்டுகளைக் கொண்டுள்ளது.கடலுார் நகராட்சி 27.69 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டது. தற்போது நகராட்சியை சுற்றிலும் ஏராளமான புதிய மனைபிரிவுகள், கிராமங்கள் உள்ளன. கடலுார் நகர எல்லையில் இருந்து திருவந்திபுரம் வரையுள்ள ஊரகப்பகுதிகள் பார்ப்பதற்கு நகராட்சி எல்லைப்பகுதிகளாகவே தெரியும்.

அந்தளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டுமன்றி கடலுாரை சுற்றி சிப்காட், நெல்லிக்குப்பம் சாலை விருத்தாசலம், சிதம்பரம் சாலையில் உள்ள கிராமங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதால் அவற்றையும் கடலுார் நகராட்சியில் சேர்த்து மாநகராட்சியாக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக சுற்றுப்பகுதியில் உள்ள 17 கிராமங்களைஇணைப்பதற்கு முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதனால் மாநகராட்சியின் எல்லைகள் விரிவடையும். மாநகராட்சியாக மாற்ற தகுதியாக நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், புதைவட கேபிள், மழைநீர் வடிகால் வாய்க்கால், கூட்டுக் குடிநீர் திட்டம் என பல கட்டங்களாக தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது.மேலும் மத்திய அரசு மாநகராட்சிக்கு வழங்கப்படும் பொது நிதி கூடுதலாகும். நகராட்சி ஆணையராக பதவி வகித்த இடத்தில் இனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவார்.

மாநகராட்சி தலைவரான மேயரின் தலைமையில் உறுப்பினர்களுடன் மாதந்தோறும் கூடி மாநகராட்சிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கப்படும்.அதனை வாதங்களுக்குப்பின் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.மாநகாரட்சி நிர்வாகம் அதன் மன்றத்தைச் சார்ந்தே உள்ளது. ஆனால் மன்றம் அதன் நிலைக்குழுவையோ அல்லது ஆணையரையோ கட்டுப்படுத்த உரிமை வழங்கவில்லை.

அதன் நிர்வாக செயல்பாட்டில் சந்தேகங்கள் ஏற்பட்டால் சந்தேகப்படும் செயலை மேயர், அம்மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் அம்மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. மன்றம் மாநகராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான வரவு செலவுத் திட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள் சரி என கருதினால் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X