இந்தியா

முதலியார்பேட்டையில் சாலை படுமோசம்; சீரமைக்க அமைச்சரிடம் எம்.எல்.ஏ., மனு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலியார்பேட்டையில், குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள கடலுார் மெயின் ரோட்டினை சீரமைக்க கோரி, அமைச்சரிடம், எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.இதுகுறித்து சம்பத் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, முதலியார்பேட்டை பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள்

புதுச்சேரி : முதலியார்பேட்டையில், குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள கடலுார் மெயின் ரோட்டினை சீரமைக்க கோரி, அமைச்சரிடம், எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து சம்பத் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, முதலியார்பேட்டை பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முதல், மரப்பாலம் சந்திப்பு வரை உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது.

இந்த சாலையை கடப்பவர்கள் புதுச்சேரி அரசு மீதும், தொகுதி எம்.எல்.ஏ., வான என் மீதும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.இச்சாலையை சீரமைத்து தரக்கோரி தங்களிடம் பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை பலமுறை சந்தித்து முறையிட்டுள்ளேன்.அப்போது ரூ. 2 கோடியில் தரமான சாலை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், புதிய சாலை அமைக்க காலதாமதம் ஏற்படுகிறது.எனவே, தற்காலிகமாக சாலையை 'பேட்ச் ஒர்க்' மட்டுமாவது செய்து, வாகன ஓட்டிகளின் இன்னல்களை நீக்க வேண்டும். பின், புதிதாக தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X