இந்தியா

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி துவக்கம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியின் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடுதோறும் சென்று

புதுச்சேரி : புதுச்சேரியின் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடுதோறும் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து, பிழையில்லாத வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கு நேரில் வரும்போது, வாக்காளர்கள் தங்களின் முழு விபரங்களை அளிக்க வேண்டும்.மேலும், வரும் ஜனவரி 1ம் தேதி அன்று தகுதி பெறும் முதல் முறை வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கான படிவத்தை வழங்கிடலாம்.இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவம்பர் 1ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.

பட்டியலில் குறைபாடு இருப்பின், நவம்பர் 30ம் தேதிக்குள் மனு கொடுக்கலாம். மேலும், நவம்பர் 7 மற்றும் 21ம் தேதிகளில் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.அதில், பெறப்படும் ஆட்சேபம் மற்றும் கோரிக்கைகள் மீது டிசம்பர் 20ம் தேதிக்குள் தீர்வு கண்டு, வரும் ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X