இந்தியா

தற்காலிக மருத்துவப் பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கோரிக்கை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சுகாதாரத் துறையில் தற்காலிகமாக பணியமர்த்தப் பட்ட மருத்துவ பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆய்வக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கொரோனா

புதுச்சேரி : சுகாதாரத் துறையில் தற்காலிகமாக பணியமர்த்தப் பட்ட மருத்துவ பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆய்வக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கொரோனா காலகட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தினர். மருத்துவ முகாம்களில் முன்கள பணியாளர்களாக நின்று, பரிசோதனை, தடுப்பூசி போடும் பணிகளை செய்தனர்.

கொரோனா 3வது அலை வரும் செப்டம்பர் மாதத்தில் உலகெங்கும் அதிகரிக்கும். இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தற்காலிக மருத்துவ பணியாளர்களின் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்ட மருத்துவ பணியாளர்களின் ஒப்பந்தத்தை உடனே நீட்டிக்க வேண்டும். சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போது, தற்காலிக பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X