பெண்ணை தாக்கி கொள்ளை அண்ணன், தங்கைக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தாக்கி கொள்ளை அண்ணன், தங்கைக்கு சிறை

Added : ஆக 25, 2021
Share
பரமக்குடி:நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியர் கிராமம் பாண்டி மனைவி சண்முகவள்ளி,60. இவர் 2019 அக். 20ல் தோட்டத்துக்கு சென்றார். அப்போது மற்றொரு பாண்டி மகன் அழகர்சாமி, தங்கை சரஸ்வதி ஆகியோர் சண்முகவள்ளியின் தலையில் வெட்டி 3 பவுன் செயின், மோதிரம், கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.சண்முகவள்ளி புகாரில் நயினார்கோவில் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் பரமக்குடி

பரமக்குடி:நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியர் கிராமம் பாண்டி மனைவி சண்முகவள்ளி,60. இவர் 2019 அக். 20ல் தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது மற்றொரு பாண்டி மகன் அழகர்சாமி, தங்கை சரஸ்வதி ஆகியோர் சண்முகவள்ளியின் தலையில் வெட்டி 3 பவுன் செயின், மோதிரம், கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.சண்முகவள்ளி புகாரில் நயினார்கோவில் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி சிவாஜி செல்லையா நேற்று தீர்ப்பளித்தார். அழகர்சாமிக்கு 7 ஆண்டு, சரஸ்வதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி சிவாஜி செல்லையா இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X