இந்தியா

காலி பணியிடம் அதிகரிப்பால் வருவாய் துறை திணறல்! பதவி உயர்வு அளிக்காததால் தொடரும் சிக்கல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வருவாய் துறையில் அதிகரித்துள்ள காலியிடங்களால் பணியில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு, திணறி வருகின்றனர்.புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வருவாய் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறையில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக
காலி பணியிடம் அதிகரிப்பால் வருவாய் துறை திணறல்! பதவி உயர்வு அளிக்காததால் தொடரும் சிக்கல்

புதுச்சேரி : வருவாய் துறையில் அதிகரித்துள்ள காலியிடங்களால் பணியில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு, திணறி வருகின்றனர்.

புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வருவாய் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறையில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் என ஐந்து முக்கிய பதவிகளில் 385 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், தற்போது 204 பேர் தான் பணியில் உள்ளனர். 141 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒட்டுமொத்த வருவாய் துறையின் பல்வேறு பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.துறையில் மொத்தமுள்ள 53 தாசில்தார் பணியிடங்களில், தற்போது 43 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

10 பணியிடங்கள் காலியாக உள்ளன.பி.சி.எஸ்., அதிகாரிகளாக 4 தாசில்தார்கள் விரைவில் பதவி உயர்வு பெற உள்ளதால், காலியிடம் மேலும் அதிகரிக்கும்.தாசில்தார் பணியிடத்தை, 100 சதவீதம் துணை தாசில்தார்களை கொண்டு பதவி உயர்வு மூலமே நிரப்ப வேண்டும். தகுதியான துணை தாசில்தார்கள் இருந்தும், காலியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது.

இதேபோல், 33 துணை தாசில்தார், 9 கிராம நிர்வாக அலுவலர், 89 கிராம நிர்வாக உதவியாளர் பணியி டங்கள் காலியாக உள்ளன.துணை தாசில்தார்களை பொறுத்தவரை, பதவி உயர்வு மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனம் மூலம் 50 சதவீதமும் நிரப்பப்பட வேண்டும்.துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்ற பிறகே அடுத்தடுத்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்று, அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.

ஆனால், வருவாய் துறையின் உச்ச பதவிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களால் ஒட்டுமொத்த வருவாய் துறையும் ஸ்தம்பித்துள்ளது.கொரோனா ஊரடங்கு பணியில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.தற்போது, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கைக்காக, வருவாய் துறை சான்றிதழ்களை பெற அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

ஆனால், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், தற்போது பணியில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, திணறி வருகின்றனர்.கொரோனா மூன்றாவது அலை விரைவில் பரவும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், தாசில்தார், துணை தாசில்தார் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X