தமிழ்நாடு

விதிமுறைகளுக்கு மதிப்பு இல்லை; வாகன ஓட்டிகள் கவனம் சிதறுகிறது; அதிகாரிகள் அலட்சியம் தொடர்கிறது; எங்கு நோக்கினும் ...விளம்பரப் பலகை!

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகரின் சாலையோரங்களில், எங்கு நோக்கினும், விளம்பரப் பலகைகளாக காட்சியளிக்கின்றன. இவற்றை அகற்ற, அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்க வேண்டும்.மாநிலம் முழுவதும், சாலையோரம், விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு, உயர்நீதிமன்றம், தடை விதித்திருக்கிறது; மேல்முறையீடு வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கிறது.அரசு நிலம் எனில், அத்துறையின் தடையின்மை
விதிமுறைகளுக்கு மதிப்பு இல்லை; வாகன ஓட்டிகள் கவனம் சிதறுகிறது; அதிகாரிகள் அலட்சியம் தொடர்கிறது; எங்கு நோக்கினும் ...விளம்பரப் பலகை!

திருப்பூர்:திருப்பூர் மாநகரின் சாலையோரங்களில், எங்கு நோக்கினும், விளம்பரப் பலகைகளாக காட்சியளிக்கின்றன. இவற்றை அகற்ற, அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்க வேண்டும்.மாநிலம் முழுவதும், சாலையோரம், விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு, உயர்நீதிமன்றம், தடை விதித்திருக்கிறது; மேல்முறையீடு வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கிறது.

அரசு நிலம் எனில், அத்துறையின் தடையின்மை சான்றும், தனியார் நிலம் எனில், உரிமையாளரின் ஒப்புதல் கடிதமும் இருக்க வேண்டும்.மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி இல்லை. இதனால், தடையின்மைச்சான்றை, இத்துறைகள் தருவதில்லை. தனியார் நிலமெனிலும், இதற்கென இந்திய சாலைக்குழும விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி ரோடுகளில், 10 அடி தள்ளியே விளம்பரப்பலகை நிறுவ முடியும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில், விளம்பரப்பலகை வைக்க தடையின்மைச்சான்று தருவதில்லை.திருப்பூரில் விதிமீறல்திருப்பூர் மாவட்டத்தில், இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல்தான், விளம்பரபலகைகள் வைக்கப்பட் டுள்ளன. திருப்பூர், மாநகரமாக இருந்தபோதும், விரிந்து பரந்த சாலைகள் இங்கில்லை.

குறுகலான சாலைகளில், வாகனங்களே ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.திருப்பூரில் பல்வேறு தொழில், வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்ட விளம்பர பலகைகளை அமைத்துள்ளன. சாலையோர விளம்பரப் பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை எளிதாக சிதறடிக்கின்றன.பிரதான வீதிகளில், பெரிய கட்டடங்களின் பக்கவாட்டு சுவர்கள், மேல் மாடி, காலியிடங்கள் என பெரிய அளவில் இரும்பு குழாய்கள் அமைத்து அதில் பிரமாண்ட பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

கண்காணிக்காதஅதிகாரிகள்

திருப்பூரில் தாராபுரம், அவிநாசி ரோடு தேசிய நெடுஞ்சாலை, பல்லடம், பெருமாநல்லுார் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பிரதான சாலைகளில், விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், விதிமுறைகள் துளியும் பின்பற்றப்படவில்லை. பெரும்பாலான விளம்பரப்பலகைகள், எந்தவித அனுமதியும் பெறவில்லை. அப்படியே அனுமதி பெற்ற விளம்பரப்பலகைகளும், விதிமீறி பொருத்தப்பட்டவையாகவே இருக்கின்றன.

இதற்கு காரணம், அதிகாரிகள், இவற்றை கண்காணிப்பதே இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், விளம்பரப்பலகைகள், இஷ்டத்துக்கு வைக்கப்படுகின்றன.மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி கூறுகையில், ''அனுமதி பெறாமலோ, விதிமுறைகளை மீறியோ, உரிமம் முடிந்தோ, விளம்பரப்பலகைகள் வைத்திருந்தால், அவை அகற்றப்படும்'' என்று கூறினார்.விளம்பரப் பலகைகளை அகற்ற, அதிகாரிகள் துணிச்சலுடன் களமிறங்க வேண்டும்! இவற்றை பெயரளவுக்கு அகற்றாமல், அகற்றிய பின்னும், முழுமையாக, இதுபோன்று விளம்பரப் பலகைகள் நிறுவாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202114:42:00 IST Report Abuse
அப்புசாமி நம்ம அதிகாரிங்க கண்காணிக்காம இருப்பாய்ங்களா? கண்கொத்திப் பாம்பா கண்காணிச்சு, கண்காணிக்காம் இருப்பதற்கு விளம்பரப் பலகை வெச்சவங்க கிட்டேயே மாமூல் வாங்கியிருப்பாய்ங்க. முதலில் தலைமை கண்காணிப்பாளரை பதவி நீக்கி சிறையிலடையுங்க. மற்றவங்க வழிக்கி வருவாய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X