'ஜாமின்' மனு மீது முடிவெடுக்க அளவுகோல் வகுத்தது: சுப்ரீம் கோர்ட்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: குற்றம் சாட்டப்பட்டவரின் 'ஜாமின்' மனு மீது முடிவு எடுப்பதற்கு முன், உயர் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.கொலை குற்றவாளி ஒருவருக்கு, உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள்
SC, Supreme Court, plea

புதுடில்லி: குற்றம் சாட்டப்பட்டவரின் 'ஜாமின்' மனு மீது முடிவு எடுப்பதற்கு முன், உயர் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.

கொலை குற்றவாளி ஒருவருக்கு, உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கும் முன் உயர் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்' என கூறிய நீதிபதிகள், அது குறித்த அளவுகோல்களையும் அறிவித்தனர்.


latest tamil news



அதன் விபரம்: வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை மற்றும் முந்தைய குற்ற செயல்கள், குற்றம் செய்ததாக நம்புவதற்கான நியாயமான காரணங்கள், வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தீவிரம் ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும்.

மேலும் குற்றச்சாட்டின் தன்மை, ஜாமின் வழங்கினால் தப்பி செல்லும் ஆபத்து உள்ளவரா, மீண்டும் குற்றம் புரிபவரா, நீதித்துறைக்கு நேரும் ஆபத்து ஆகியவற்றையும் பரிசீலித்த பின்பே உயர் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandhi Sundarraj - chennai,இந்தியா
25-ஆக-202113:23:24 IST Report Abuse
Anandhi Sundarraj டெஸ்ட் Good இவர் குட்
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
25-ஆக-202110:17:13 IST Report Abuse
ganesha இதெல்லாம் ஒரு ஜுட்க்க்கு தெரியாதா? சுப்ரீம் கோர்ட் சொல்லி தான் தெரியுமா? மேல் கோர்ட்ல கீழ்கோர்ட் தீர்ப்பு தப்புன்னு சொன்னாங்க அந்த ஜுட்ஜ்க்கு ஒரு வருஷம் ப்ரோமோஷன் தள்ளி போகும்னு சொல்லுங்கோ. இல்லை சம்பளம் தள்ளிப்போகும் ஓய்வூதியம் தள்ளிபோகும்னு சொன்னா, போறும். நீதித்துறைல நீதி உண்மையாகவே கொடிகட்டி பறக்கும். ரொம்ப நன்னா இருக்கும். இதை தயவு செய்து சுப்ரீம் கோர்ட் சொல்லணும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஆக-202109:07:18 IST Report Abuse
அசோக்ராஜ் ஐயய்யோ ... இந்த கண்டிசன்களைப் பார்த்தால் கிங்பின் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக தானே திகார் சுவரேறி குதிச்சு செல்லுக்குள்ளே போய் தாள் போட்டுக்குவாரே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X