கடலுார் : கடலுார் அருகே விவசாயிகளின் புது முயற்சியாக, பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோஸ் உள்ளிட்ட பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குளுமையான பகுதியில் இந்த சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் மல்லிகை, செண்டு மல்லி, சாமந்தி மற்றும் முல்லை பூக்களைப் விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர்.
தற்போது, கடலுார் கேப்பர்மலை அருகே வழிசோதனைபாளையம் மற்றும் எஸ்.புதுார் பகுதியில் புது முயற்சியாக, பன்னீர் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஓராண்டாக இப்பகுதியில் குறைந்த இடத்தில் பயிர் செய்துள்ளனர்.விவசாயி ரகு கூறுகையில், பன்னீர் ரோஸ் செடிகளை பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து சாகுபடி செய்திருப்பதாகவும், குளிர் காலங்களில் அதிகம் பூக்கிறது.
வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு வீணாகாமல் தடுக்க, கூண்டு அமைத்து செடிகளை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். 30 செண்ட் இடத்தில் மாதத்தில் ரூ. 20 ஆயிரம் வரையில் வருமானம் கிடைக்கிறது, என்றார். கடலுார் பகுதியில் குளிர் பிரதேச காய்கறிகள் அதிகம் பயிர் செய்துவரும் நிலையில், தற்போது பூ சாகுபடி செய்யும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட் டுள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement