ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன சாலை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அரசின் திட்டம் வீணாகி வருகிறது.கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மந்தாரக்குப்பம் பகுதிகளில் இருபுறமும் மரங்கள், கடைகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தனர். விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலைகளில் பல கோடி ரூபாய் அரசு நிதியில்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அரசின் திட்டம் வீணாகி வருகிறது.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மந்தாரக்குப்பம் பகுதிகளில் இருபுறமும் மரங்கள், கடைகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தனர். விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலைகளில் பல கோடி ரூபாய் அரசு நிதியில் செய்த பணிகள் அனைத்தும் சில மாதங்கள் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

பின், சாலை விரிவாக்கம் செய்த பகுதிகளில் தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பு, நெடுஞ் சாலையில் சிமெண்ட் கல் அமைத்தல், கடைகள் முன்பு மேற்கூரை அமைத்தல் போன்றவற்றால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து தேசிய நெடுஞ்சாலை மறைகிறது.

கடைவீதியில் ஆக்கிரமிப்புகளால் நான்கு வழிச்சாலை குறுகி இருவழிச்சாலையாக மாறி வருவதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X