பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான பேரிகார்டுகள் மாற்றம்; மாவட்ட காவல் துறை நடவடிக்கை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிதம்பரம் : கடலுார் மாவட்டம் முழுவதும் பழுதான பேரிகார்டுகளுக்கு பதிலாக 'மாவட்ட காவல் துறை' என்ற வாசகத்தோடு புதிய பேரிகார்டுகள் வைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டிகளுக்காக வழித்தடம் அமைப்பதிலும் பேரிகார்டுகள் வைக்கப்படுவது

சிதம்பரம் : கடலுார் மாவட்டம் முழுவதும் பழுதான பேரிகார்டுகளுக்கு பதிலாக 'மாவட்ட காவல் துறை' என்ற வாசகத்தோடு புதிய பேரிகார்டுகள் வைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுார் மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டிகளுக்காக வழித்தடம் அமைப்பதிலும் பேரிகார்டுகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த பேரிகார்டுகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவியோடு வைக்கப்படும். அந்த பேரிகார்டுகளை வழங்குவோரின் பெயர்கள் பெரிய அளவில் இருக்கும். காவல் துறை என்ற வாசகம் மிக சிறியதாக இருக்கும்.

தற்போது இந்த நடைமுறையை மாற்றி மாவட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் காலாவதியான, பழுதான பேரிகார்டுகளை மாற்றி புதிதாக அனைத்து பகுதியிலும் வைக்கப்படுகிறது. புதியதாக வைக்கப்படும் பேரிகார்டுகளில் 'மாவட்ட காவல் துறை' என்ற வாசகம் பெரிதாகவும், ஸ்பான்சர் கொடுத்தவரின் நிறுவனப்பெயர் மிக சிறிதாகவும் எழுதியிருந்தது வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X