பொது செய்தி

தமிழ்நாடு

 ஊரக புத்தாக்கத் திட்ட விளக்க ஆலோசனை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், பிற துறை நிறுவன அலுவலர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட விளக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.செயல் அலுவலர் முத்துக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், சுந்தரம்,வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முதலீட்டுத்

புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், பிற துறை நிறுவன அலுவலர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட விளக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

செயல் அலுவலர் முத்துக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், சுந்தரம்,வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முதலீட்டுத் திட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் சுதாதேவி விளக்கமளித் தார். மேல்புவனகிரி ஒன்றியத்தில், 47 ஊராட்சிகளின் மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம முதலீட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால்நடை, சுற்றுலாத்துறையினர் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல் அலுவலர் சதீஷ்குமார், இளம் வல்லுனர் கதிரவன், திட்ட செயலர் பஞ்சநாதன் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர். வட்டார அணித்தலைவர் கரிகாலன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X