சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் மதுபாட்டில்கள் கடத்தல்; நெல்லிக்குப்பம் அருகே 2 பேர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரூ 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காரில் கடத்திய இருவரை போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நெல்லிக்குப்பம் வழியாக மது பாட்டில்கள், சாராயம் கடத்துவது தொடர்கிறது.நேற்று அதிகாலை பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரூ 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காரில் கடத்திய இருவரை போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நெல்லிக்குப்பம் வழியாக மது பாட்டில்கள், சாராயம் கடத்துவது தொடர்கிறது.நேற்று அதிகாலை பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த பி.ஒய்.01 ஏ 4041 எண்ணுள்ள டாடா இன்டிகா காரை நிறுத்தினர்.கார் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

சந்தேகமடைந்த போலீசார் 10 கி.மீ., துாரம் துரத்திச் சென்று ராஜாபாளையம் அருகே மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிந்தது.பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா வழக்கு பதிந்து சென்னை, திருப்போரூரை சேர்ந்த கார் டிரைவர் சேகர் மகன் சத்யா,30; புதுச்சேரி சோமு மகன் பாலமுருகன்,26; ஆகியோரை கைது செய்தனர். ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 30 அட்டை பெட்டிகளில் இருந்த 360 மது பாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X