பொது செய்தி

தமிழ்நாடு

விருதை கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நேற்று காலை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது. முக கவசம் அணிந்து வந்த மாணவர்களிடம் ஒரிஜினல் கல்விச்

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நேற்று காலை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது. முக கவசம் அணிந்து வந்த மாணவர்களிடம் ஒரிஜினல் கல்விச் சான்றுகளை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சரிபார்த்தனர்.பின், தகுதியான மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் ராஜவேல் சேர்க்கை ஆணையை வழங்கி வாழ்த்தினார்.

நாளை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாக பிரிவுகளுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்டமாக 28ம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 31ம் தேதி கலை பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X