விலை அதிகரிப்பு: மக்காச்சோளம் நடவுக்கு ஆர்வம்: விலை அதிகரிப்பால் மனமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலை அதிகரிப்பு: மக்காச்சோளம் நடவுக்கு ஆர்வம்: விலை அதிகரிப்பால் மனமாற்றம்

Added : ஆக 25, 2021
Share
உடுமலை:நடப்பு ஆடிப்பட்டத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்; தற்போதைய விலை நிலவரமும், மனமாற்றத்துக்கு முக்கிய காரணமாகியுள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், சராசரியாக, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்,

உடுமலை:நடப்பு ஆடிப்பட்டத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்; தற்போதைய விலை நிலவரமும், மனமாற்றத்துக்கு முக்கிய காரணமாகியுள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், சராசரியாக, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், இடுபொருட்கள் விலை உயர்வு, மகசூல் குறைவு மற்றும் அறுவடையின் போது வரத்து அதிகரித்து விலை சரிவு என விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.கடந்தாண்டு, அறுவடையின் போது, குவிண்டால், 1, 400 ரூபாய் என்ற அளவிற்கு விற்றதால், விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதமாக மக்காச்சோளத்திற்கு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, குவிண்டால், 2,250 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தற்போது மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.அமராவதி மற்றும் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பு, தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து, வட கிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரி நிலங்களிலும், இறவை பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது.விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியை துவக்கியுள்ள நிலையில், போலி விதை விற்பனை, போலி வாக்குறுதிகளை கொடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.எனவே, தரமான விதை விற்பனையை உறுதி செய்யவும், இடு பொருட்கள், தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கவும், நடப்பு பருவத்திலும் படைப்புழு தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிப்பதை தடுக்க உரிய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.படைப்புழு தாக்குதல் உள்ள பகுதிகளில், வேளாண்துறையினர் நேரடியாக கள ஆய்வு செய்து, கிராமம்வாரியாக, ஆலோசனை வழங்கினால் மட்டுமே, சாகுபடியில், பாதிப்பை தவிர்க்க முடியும். மேலும், பரிந்துரைக்கப்படும் வரப்பு பயிர்களுக்கான விதைகளையும் மானியத்தில், வினியோகித்தால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X