பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புவனகிரி : மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் 34 வது ஆண்டு ஆராதனை விழா நேற்று காலை பல்வேறு அபிேஷகங்களுடன் துவங்கியது.காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் விழா துவங்கியது. மந்தராலய மரபின் படி பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பகல் 1.00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்

புவனகிரி : மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் 34 வது ஆண்டு ஆராதனை விழா நேற்று காலை பல்வேறு அபிேஷகங்களுடன் துவங்கியது.

காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் விழா துவங்கியது. மந்தராலய மரபின் படி பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பகல் 1.00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர். பூஜைகளை நரசிம்மாச்சாரியார் புதல்வர்கள், ரகு, ரமேஷ் ஆச்சாரியார் குழுவினர் செய்தனர். இன்று 25ம் தேதி பூர்வ ஆராதனை, நாளை 26 ம் தேதி உத்திர ஆராதனை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X