பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் வடிகால் வாய்க்கால் பணி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : வடகரை காலனியில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் அடுத்த வடகரை காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வடக்கு தெரு, நடுத்தெரு, மாரியம்மமன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வடிகால் வசதியின்றி மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி

பெண்ணாடம் : வடகரை காலனியில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம் அடுத்த வடகரை காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வடக்கு தெரு, நடுத்தெரு, மாரியம்மமன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வடிகால் வசதியின்றி மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வடிகால் அமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் கழிவுநீருடன் மழை நீர் தேங்கி நின்றது.

ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக வடிகால் வாய்க்கால் அமைக்க பள்ளம் தோண்டி சிமென்ட் பைப் மட்டும் பொருத்தப்பட்டது. முழுமையாக பணிகள் முடிக்கவில்லை. இதனால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியதால் மக்கள் வெளியே செல்ல முடியவில்லை.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மாலை 4:50 மணியளவில், ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததால் மாலை 5:10 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X