பொது செய்தி

தமிழ்நாடு

குளம், தடுப்பணைகளில் நீர் நிரப்பும் பணி: கால்வாய்களை சுத்தம் செய்யும் விவசாயிகள்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால், கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறது.ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா விவசாயம், ஆழியாறு அணையை நம்பியே உள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு
 குளம், தடுப்பணைகளில் நீர் நிரப்பும் பணி: கால்வாய்களை சுத்தம் செய்யும் விவசாயிகள்

ஆனைமலை:ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால், கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறது.ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா விவசாயம், ஆழியாறு அணையை நம்பியே உள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து, இரு நாட்களுக்கு முன், 120 அடி உயரத்தில், 119.10 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி கால்வாய்கள் வழியாக, சமத்துார் எலவக்கரை குளம், ஆனைமலை குளப்பத்து குளம் மற்றும் குப்புச்சிபுதுார் குளம் மற்றும் தடுப்பணைகளுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கால்வாய் வழியாக வினாடிக்கு, 200 கனஅடி, வேட்டைக்காரன்புதுார் கால்வாய் வழியாக, 80 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 1.25 மெகா வாட் மின் உற்பத்திக்காக, ஆழியாறு புனல் மின் நிலையத்துக்கு வினாடிக்கு, 150 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் செல்லும் கால்வாய்களில், விவசாயிகளுடன் இணைந்து கால்வாய்களை சுத்தம் செய்து வருகிறோம்,' என்றனர்.புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகையில், 'குளப்பத்து குளம், எலவக்கரை குளம், குப்புச்சிபுதுார் மற்றும் அய்யன் குளங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், அங்கலக்குறிச்சி, மஞ்சநாயக்கனுார், கரியாஞ்செட்டிபாளையம் மற்றும் கொங்கலப்பம்பாளையம் பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரப்பப்படுகின்றன.இதற்காக, கால்வாய்களில், பொக்லைன் இயந்திரங்கள் வைத்து குப்பை மற்றும் புதர்கள் சுத்தம் செய்யப்படுகிறது. அடைப்புகள் சரிசெய்து நீர் செல்வதற்கு ஏதுவான சூழல் ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X