பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி; பதிலளிக்க முடியாமல் செயற்பொறியாளர் திணறல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த தண்ணீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செயற்பொறியாளர் திணறிப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று சிதம்பரம் பொதுப்பணித்துறை

சிதம்பரம் : சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த தண்ணீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செயற்பொறியாளர் திணறிப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது. பொதுப் பணித் துறையில் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்து விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். அதிகாரிகள் அருணகிரிநாதன், விவசாய சங்க தலைவர்கள் ரவீந்திரன், விநாயகமூர்த்தி, கோதண்டராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பல கோடி ஒதுக்கீடு செய்தும் விவசாயிகளின் கோரிக்கையை சிறப்பு திட்டத்தின் மூலம் நிறைவேற்றாமல் முறைகேடு நடந்துள்ளது. முக்கியமான வாய்க்கால்களை துார் வாரி விட்டு கிளை வாய்க்கால்களை துார் வராததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.மேலும் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செயற்பொறியாளர் சாம்ராஜ் அமர்ந்திருந்தது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சர்வ ராஜம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மூன்று ஆண்டுகளாக ஒரு ஷட்டர் பராமரிப்பின்றி இருப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சுமார் 700 ஏக்கர் விளைநிலங்கள் வீணாகிறது என கூறினார். விவசாயிகளின் குற்றச் சாட்டால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியாக வரும் 29ம் தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X