பொது செய்தி

தமிழ்நாடு

பார்சல் அலுவலகம் மூடக் கூடாது; வணிகர் சங்க பேரமைப்பு மனு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுகம் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தை மூடக் கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு அளித்துள்ளது.கடலுார் துறைமுகம் ரயில் நிலைய மேலாளர் குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் மண்டலத் தலைவர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:கடலுார் துறைமுகம் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன்

கடலுார் : கடலுார் துறைமுகம் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தை மூடக் கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு அளித்துள்ளது.

கடலுார் துறைமுகம் ரயில் நிலைய மேலாளர் குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் மண்டலத் தலைவர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:கடலுார் துறைமுகம் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலமாக மீன்கள், சங்குகள், இறால்கள், பாத்திரங்கள், நாட்டுக் கோழி, முந்திரி, நவராத்திரி கொலு பொம்மைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுபோன்ற நிலையில் பார்சல் அலுவலகத்தை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, பார்சல் அலுவலகம் மூடும் முடிவை கைவிட வேண்டும். கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில் செந்துார் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்களையும், கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மன்னை எக்ஸ்பிரஸ், உழவன்எக்ஸ்பிரஸ் ரயில்களும்நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. பகுதி செயலர்கள் சன் பிரைட் பிரகாஷ், சதீஷ், நிர்வாகிகள் பாண்டியன், வீரமணி, குணா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X