பொது செய்தி

தமிழ்நாடு

மழை முன்னேற்பாடு பணியில் ஈடுபட போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : பருவமழை முன்னேற்பாடு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டத்தில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. தற்போது, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில்

கடலுார் : பருவமழை முன்னேற்பாடு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. தற்போது, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளை போலீசார் ஆய்வு செய்து தாழ்வான பகுதிகளை கண்டறிய வேண்டும்.

மழைநீர் வழிந்தோட வேண்டிய தடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்மழையால் போக்குவரத்து பாதிக்கும் பகுதிகளையும் கண்டறிந்து போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படுவோரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க தேவையான ஆம்புலன்ஸ் வசதிகளையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X