பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த வீடுகளை சீரமைக்க பழங்குடியின மக்கள் வலியுறுத்தல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பழங்குடியினர் வசிக்கும் வீடுகளை புனரமைக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் முகாமில், மக்கள் மனு கொடுத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.* ஆழியாறு நகர் புளியங்கண்டி பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில், 'புளியங்கண்டியில், 41 வீடுகள் உள்ளன; நான்கு
 பழுதடைந்த வீடுகளை சீரமைக்க பழங்குடியின மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'பழங்குடியினர் வசிக்கும் வீடுகளை புனரமைக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் முகாமில், மக்கள் மனு கொடுத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.* ஆழியாறு நகர் புளியங்கண்டி பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில், 'புளியங்கண்டியில், 41 வீடுகள் உள்ளன; நான்கு தலைமுறையாக இந்த கிராமத்தில் வசிக்கிறோம். கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் என, 180 பேர் வசிக்கிறோம். ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறோம்.கடந்த, 2000 - 01ல் வனத்துறையினரால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளது. மோசமான நிலையில் உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வசிக்கிறோம். பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மன வேதனையாக உள்ளது. குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.* தம்மம்பதி பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில், 'பழங்குடியின மக்கள் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்குள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளன. எனவே, வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X