ஒரு பரு நாற்று கரும்பு சாகுபடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு பரு நாற்று கரும்பு சாகுபடி

Added : ஆக 25, 2021
Share
கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில் ஒரு பரு நாற்று விட்டு கரும்பு சாகுபடி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி செந்தில்குமார், கோதண்டராமபுரம் ஊராட்சி தலைவர் ஜெயா சுரேஷ்,

கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில் ஒரு பரு நாற்று விட்டு கரும்பு சாகுபடி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி செந்தில்குமார், கோதண்டராமபுரம் ஊராட்சி தலைவர் ஜெயா சுரேஷ், வழுதலம்பட்டு ஆறுமுகம், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், கடலுார் வேளாண் துணை இயக்குநர் பூங்கோதை, குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் பூவராகன், வேளாண் உதவி இயக்குனர் ஜானகிராமன் ஆகியோர் பயிற்சியளித்தனர். ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை உதவி கரும்பு மேலாளர்கள் வெங்கடேசன், கலைச்செல்வன், ஜெயின் இரிக்கேஷன் மாவட்ட மேலாளர் பாக்கியராஜ், குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர் அனுசுயா பேசினர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சிவக்குமார், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X