கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் இன்று சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் இன்று சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

Added : ஆக 25, 2021
Share
கடலுார் : கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (25ம் தேதி) துவங்குகிறது.கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்புக் கல்வியாண்டில் (2021-22) இளநிலை முதலாமாண்டில் 1,329 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. அவைகள் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு,

கடலுார் : கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (25ம் தேதி) துவங்குகிறது.

கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்புக் கல்வியாண்டில் (2021-22) இளநிலை முதலாமாண்டில் 1,329 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. அவைகள் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் கல்லுாரி இணையதளத்தில் www.pacc.in வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. சேர்க்கை கலந்தாய்வு குறித்த தகவல் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.இன்று 25ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 26ம் தேதி கலைப் பிரிவினருக்கும், 27 முதல் 31ம் தேதி வரையில் அறிவியல் பிரிவினருக்கும், செப்.1 ம் தேதி மொழி பாடங்களுக்கும், செப்.2 முதல் 4 வரை கலையியல் பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 7 ம் தேதி அறிவியல் பிரிவினருக்கும், 8 ம் தேதி மற்ற பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் அவரவருக்கு உரிய கலந்தாய்வு நாளில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, கடலுார் அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பழனிவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X