சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் சந்தேகம்; தாய் போலீசில் புகார்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுாரில் திருமணமான இரண்டே ஆண்டில் இறந்த மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.வடலுார் நடேசன் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 26; பெயிண்டர். இவரது மனைவி லதா, 22; இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் லதா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அஞ்சலைக்கு தகவல் வந்துள்ளது. வடலுார்

வடலுார் : வடலுாரில் திருமணமான இரண்டே ஆண்டில் இறந்த மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

வடலுார் நடேசன் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 26; பெயிண்டர். இவரது மனைவி லதா, 22; இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் லதா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அஞ்சலைக்கு தகவல் வந்துள்ளது. வடலுார் போலீசில் நேற்று அஞ்சலை கொடுத்துள்ள புகாரில், தனது மகள் லதாவை அவரது கணவர் விமல்ராஜ் ஆட்டோ வாங்க வேண்டுமென ரூ 50 ஆயிரம், 3 பவுன் நகையும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.அதியமான் கவியரசு விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X