சிங்கம்புணரி ஒன்றிய கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் உறவினர்கள் வாதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கம்புணரி ஒன்றிய கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் உறவினர்கள் வாதம்

Added : ஆக 25, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் வாதம் செய்து கோரிக்கை வைத்தனர்.சிங்கம்புணரி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யா பிரபு தலைமையில் நடந்தது. ஆணையாளர் லெட்சுமணராஜு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19 தீர்மானங்கள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் வாதம் செய்து கோரிக்கை வைத்தனர்.சிங்கம்புணரி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யா பிரபு தலைமையில் நடந்தது. ஆணையாளர் லெட்சுமணராஜு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர்கள் முக்கிய பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது தி.மு.க., கவுன்சிலர் ரம்யாவுக்கு ஆதரவாக அவரது கணவர் செல்வகுமார் பேசினார். ஊராட்சி ஒன்றியத்தில் செலவினங்கள் அதிகம் காட்டப்படுவதாகவும் கேள்வி கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை என்றும் அவர் கூறினார். அதேபோல் தே.மு.தி.க., கவுன்சிலர் உமாவுக்கு ஆதரவாக அவரது கணவர் சோனமுத்து பேசினார்.

தங்கள் வார்டில் சாலைப் பணி அமைக்க வனத்துறை அனுமதி தராததால் பணிகள் பாதியில் நிற்பதாகவும், குடிநீர் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மகளிருக்கு அதிகாரம் வழங்கவே உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் பெண் கவுன்சிலர்களை முழுமையாக பேசவிடாமல் அவரது உறவினர்கள் தலையிடுவது மகளிர் அதிகாரத்தை குறைக்கும் செயல் என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முணுமுணுத்தனர். இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, பெரியகருப்பி, இளங்குமார், சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X