சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவத்தில் சேர பயிற்சி பெற்றவர் பலி உடலை வாங்க மறுத்து போராட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை அருகே ராணுவத்தில் சேருவதற்காக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம்மோதி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள்,வி.சி.,கட்சியினர் போராட்டம் நடத்தினர்.ராஜகம்பீரம் உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் விக்னேஷ்வரன் 20,இவர் இந்திய ராணுவத்தில் சேர தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

மானாமதுரை : மானாமதுரை அருகே ராணுவத்தில் சேருவதற்காக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம்மோதி பலியானார்.

அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள்,வி.சி.,கட்சியினர் போராட்டம் நடத்தினர்.ராஜகம்பீரம் உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் விக்னேஷ்வரன் 20,இவர் இந்திய ராணுவத்தில் சேர தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். நேற்று அதிகாலை மதுரை-ராமேஸ்வரம் 4 வழிச்சாலை ஓரமாக உடையான்பட்டி பகுதியிலிருந்து மானாமதுரைக்கு ஓடி வந்த போது ராஜகம்பீரம் பழைய மில் கேட் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விக்னேஷ்வரன் பலியானார்.

உடலை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணி,ஒன்றிய செயலாளர் விடுதலை மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம், போலீசாரிடம் மோதிய வாகனத்தை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி 2 மணி நேரத்திற்கும் மேலாக உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர்.போலீசார் அவர்களிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X