பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆடூர் பொன்னேரியில் புதிய பாலம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புவனகிரி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் சிதம்பரம்-கே.ஆடுர் செல்லும் சாலையில் பொன்னேரியில் பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. கீரப்பாளையம் ஒன்றியம் கே.ஆடூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வகையில் பொன்னேரிக்கரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைத்த பாலம் வலுவிழந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி

புவனகிரி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் சிதம்பரம்-கே.ஆடுர் செல்லும் சாலையில் பொன்னேரியில் பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.

கீரப்பாளையம் ஒன்றியம் கே.ஆடூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வகையில் பொன்னேரிக்கரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைத்த பாலம் வலுவிழந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. சேர்மன் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து திட்டமதிப்பீட்டுடன் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை கிராம சாலை திட்டப்பணிகள் மூலம் பழைய பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதியப்பாலம் கட்டும் பணி துவங்கியது. இந்த பணியை நேற்று கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து உதவி இயக்குனர் சூரியமூர்த்தி விளக்கமளித்தார். இளநிலை உதவி பொறியாளர் எழில்வளவன், கலக்டர் நேர்முக உதவியாளர் சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X